உ ஸ்ரீ கேதாரீஸ்வரர் நோன்பு விரத புராணம் காப்பு   தாரனைய கூந்தற் கவுரி யியற்றியகே தார விரதத்தை யான்படிக்க – சீரிலகும் ஐந்துகரத்தந்திமுகத் தண்ணலடி யார்க்கருளுங் கந்தமலர்ச் செஞ்சரேண காப்பு. நூல்                      ஆதி காலத்தில் கைலாயத்திலே நவரத்தினங்களாலிழைத்த சிம்மாசனத்தின் மீது பரமேஸ்வரரும் பார்வதி தேவியும் கொலுவீற்றிருக்கையில், பிரம்மா, விஷ்ணு, தேவேந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்கள், நாற்பத்தொண்ணாயிரம் ரிஷிகள், அஷ்ட வசுக்கள், கின்னர், கிபுருடர், கருடகாந்தருவர், சித்த வித்யாதரர், ஜனகஜனாநந்தர், ஜனத்குமாரர், தும்புருநாரதர், மற்றுமுண்டான தேவரிஷிகளும் […]